tamilnadu

img

பெண் துணை ஆட்சியர் மீது பாஜகவினர் தாக்குதல்... தலைமுடியைப் பிடித்திழுத்து, கையை முறுக்கினர்

போபால்:
மத்தியப்பிரதேசத்தில் பாஜக நடத்திய சிஏஏ ஆதரவு போராட்டத்தில், மாவட்ட துணை ஆட்சியர் பிரியா வர்மா தாக்கப்பட்டுள்ளார்.பெண் அதிகாரியான பிரியா வர்மாவின் தலை முடியைப் பிடித்து இழுத்து,கையை முறுக்கிய பாஜக-வினர், பாலியல் ரீதியாகவும் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளனர்.மத்தியப் பிரதேச மாநிலம், ‘ராஜ்கார்க்’ பகுதியில் ‘சிஏஏ’விற்கு ஆதரவு தெரிவித்து பாஜக-வினர் ஞாயிறன்று போராட்டம் நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு அரசு அனுமதி வழங்கப்படவில்லை.இதனால், போராட்டக்காரர்களை, ‘கலைந்து செல்லுமாறு’ அம்மாவட்ட ஆட்சியர் நிதி நிவேதா மற்றும் துணைஆட்சியர் பிரியா வர்மா ஆகியோர் கூறியுள்ளனர். ஆனால் அதனைக் கண்டுகொள்ளாத பாஜக-வினர் தொடர்ந்து போராட்டம் நடத்தியதோடு, பொதுச் சொத்துக்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். அதனைத் தடுக்க முயன்ற, மாவட்ட துணை ஆட்சியர் பிரியா வர்மா மீது தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர்.“சில பாஜக தொண்டர்கள் என்னிடம் தவறாக நடந்து கொண்டனர். என்னை தவறாக சீண்ட முயன்றார்கள். அதனை தட்டிக்கேட்டபோது, கையைப் பிடித்து முறுக்கித் திருகினார்கள்.தலைமுடியைப் பிடித்து தர தரவெனஇழுத்துச் சென்றும் தாக்குதல் நடத்தினர். இதனால் அவர்களில் ஒருவரைநான் அறைந்தேன்” என்று மாவட்டதுணை ஆட்சியர் பிரியா வர்மா பேட்டியில் கூறியுள்ளார்.

;